Header Ads



மத்திய கிழக்கு நாடுகளில், பெண்கள் உள்ளிட்ட மேலும் 9 இலங்கையர்களுக்கு மரணத் தண்டனை

மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் 9 இலங்கையர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் சவூதி அரேபியாவில் கல்லால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த இலங்கை வீட்டுப் பணிப் பெண்ணின் தண்டனை தளர்த்தப்பட்டது.

எனினும் மத்திய கிழக்கு நாடுகளில் மேலும் 9 இலங்கையர்கள் மரண தண்டனையை எதிர்நோக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட உள்ளவர்களில் இரண்டு பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சவூதியில் கல்லால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்றும் தண்டனை கடந்த 9 ஆண்டுகளில் நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிகமாக பலர் சிறைத்தண்னை அனுபவித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவிகளை அரசாங்கம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. ஜப்னா முஸ்லிம் நிர்வாகத்திற்கு,

    தேசியக் கொடியில் மாற்றம் செய்வது தவறு. தேசியக் கொடியில் சேறு பூசியுள்ளதை போன்று இருக்கின்றது, அந்த கண் இமை.

    ReplyDelete
  2. Remove this image immediately please.

    ReplyDelete

Powered by Blogger.