ரஷியாவுக்கு 9 டன் யுரேனியம்; ஈரான் ஏற்றுமதி செய்கிறது
ஈரான் அணுசக்தி திட்டங்களை நிறைவேற்றுவதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில், அந்த நாடு, ரஷியாவுக்கு செறிவூட்டப்பட்ட 9 டன் யுரேனியத்தை ஏற்றுமதி செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதை ஈரான் அணுத்துறை தலைவர் கூறியதாக, அந்த நாட்டின் அரசு செய்தி நிறுவனம் ‘இர்னா’ கூறி உள்ளது. அடுத்த சில நாட்களில் இந்த யுரேனியம் ரஷியா போய்ச்சேரும் என ‘இர்னா’ தெரிவித்துள்ளது. ரஷியாவுக்கு ஈரான் யுரேனியம் ஏற்றுமதி செய்வது, ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை அகற்ற உதவும் என சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.
Post a Comment