Header Ads



விமல் வீரவன்ச 8 ஆம் வகுப்புவரை, கல்வி கற்றது ஏன் தெரியுமா..?

வெள்ளையர் உருவாக்கி வைத்துள்ள கல்வித்திட்டம் எந்தப் பயனும் அற்றது என்று தான் உயர்கல்வி பெறாமல் போனது குறித்து விமல் வீரவங்ச புது நியாயம் கற்பித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்பது அரசியல் வட்டாரத்தில் பகிரங்க ரகசியமாகும்.

எனினும் தான் கட்சியின் கொள்கைக்கு அமைவாகவே உயர்கல்வியைத் தொடராமல் இடைநிறுத்தியதாக தற்போது அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விமல் வீரவங்சவிடம் அவரது கல்வித் தகைமை குறித்து ஆதரவாளர்கள் வினா எழுப்பியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலளித்துள்ள விமல் வீரவங்ச, வெள்ளையரின் கல்வி முறையில் உருவான பட்டப்படிப்புகள் வெறும் வெற்றுக் காகிதங்கள் என்பது அன்றைய ஜே.வி.பி. யின் கொள்கையாகும். அதன் காரணமாகவே நான் படிப்பை இடைநிறுத்தினேன்.

அத்துடன் ஜே.வி.பி. கட்சிக்குள் கற்றுத்தரப்படும் அறிவுபூர்வமான கற்கைகள் காரணமாக பட்டப்படிப்பை விடவும் மேலான அறிவைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆனால் இன்றைய ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார வெள்ளையரின் கல்வித்திட்டத்தை ஏற்றுக் கொண்டு அதனை சிலாகித்துப் பேசி வருகின்றார் என்றும் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. That is why he is thinking every things in wrong way. And he does not know decent approaches and talk.

    ReplyDelete
  2. ஹீ ஹீஹ் ஹீஈ...... 2/2=0.... நம் நாட்டின் அரசியல் கரும்புள்ளிகளில் ஒருவர்.

    ReplyDelete
  3. உன்னை நினைத்தால் எங்களுக்கு வெட்கம் வருது இந்த 8 வைத்துக்கொண்டுதானா நீ தலைக்கும் வாய்க்கும் சம்மதம் இல்லாமல் கத்தி திரிந்தாய்

    ReplyDelete

Powered by Blogger.