8 வயது முஹம்மது அய்மான், படைத்த சாதனை
தமிழக சிறுவன் உலக சாதனை : The Most Power of Brunei - பத்திரிக்கைகள் புகழாரம்.....!!
நாகை மாவட்டம் சங்கரன் பந்தலை அடுத்த சாத்தனூரை சேர்ந்த முஹம்மது அய்மான் புருனையில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
முஹம்மது அய்மானுக்கு வயது 8 ஆகிறது.
அண்மையில் புருனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அய்மான் தனது உடலில் கயிறு கட்டி இரண்டு காரை இழுத்து உலக சாதனை படைத்துள்ளார்.
சென்ற வருடம் 7 வயதில் ஒரு காரை இழுத்து சாதனை படைத்திருந்தார். இந்த ஒரு வருடத்தில் அதிகமான பயிற்சி எடுத்து இரண்டு காரை இழுத்து சாதனை படைத்துள்ளார்.
முஹம்மது அய்மானை பல்வேறு ஊடகங்கள் பாராட்டியுள்ளது. சில பத்திரிக்கைகள் The Most Power of Brunei என்று புகழாரம் சூட்டியுள்ளது.
இதுத்தொடர்பாக அய்மானின் தந்தை முஜீபுர் ரஹ்மான் கூறுகையில்....
தம்முடைய மகன் உலக சாதனை படைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், அடுத்ததாக ஹெலிகாப்டரை இழுத்து தமது மகன் சாதனை படைக்க போவதாவும் கூறியுள்ளார்.
முஹம்மது அய்மானின் வீர தீர செயலை பாராட்டி இன்னும் பல்வேறு சாதனைகள் செய்து வரலாறு படைக்க ஏக இறைவனிடம் நாமும் பிரார்த்திப்போம்.
Post a Comment