8 ஆவது தடவையாக பல்டிக்கு, தயாராகும் சம்பிக்க..?
அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் உள்ளதாக தெரிவிக்கிறது. இதன்படி அவர் எட்டாவது தடவையாக கட்சி மாறுகிறார். 1980 களில் ஜே.வி.பி.யில் இணைந்த சம்பிக்க ரணவக்க அதன் பின்னர் 1994 ஆம் ஆண்டில் ஜனதா மித்துரோ எனும் கட்சியை உருவாக்கி அதன் உறுப்புரிமையில் செயற்பட்ட நிலையில் 1999ஆம் ஆண்டில் சிஹல உறுமய கட்சியில் இணைந்தார்.
பின்னதாக 2004ஆம் ஆண்டு ஜாதிக ஹெல உறுமய கட்சியில் இணைந்து கொண்ட அவர் 2005ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார்.
இதேவேளை இந்த வருடம் நடந்த தேர்தல்களில் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கும் நோக்கில் புதிய ஜனநாயக முன்னணி என்ற கட்சிக்கு ஆதரவளித்து அக் கட்சியில் பொதுத்தேர்தலில் போட்டியிட்டார்.
இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொள்ளவுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது. இதன்படி எட்டாவது தடவையாக அவர் கட்சி மாறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அரசியலில் இதெல்லாம் சதாரணமப்பா
ReplyDeletePresent day "Baldi Naana" Razik Fareed.
ReplyDelete