இலங்கைக்கு 73வது இடம்
உயர் மனித அபிவிருத்தி வகுதியில் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் 73வது இடம் கிடைத்துள்ளது.
2015ஆம் ஆண்டின் மனித அபிவிருத்தி சுட்டெண்ணில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தினால் இந்த தரப்படுத்தல் வெளியிடப்பட்டது.
இதன்படி 188 நாடுகளை மையப்படுத்திய தரப்படுத்தலில் இலங்கை படிப்படியாக முன்னேற்றம் கண்டுள்ளது.
2015ஆம் ஆண்டு மனித அபிவிருத்தியை அடைதலில் இலங்கை 0.757 என்ற புள்ளிகளை பெற்றுள்ளது. 2014ஆம் ஆண்டு இலங்கை 0.679 புள்ளிகளை பெற்றிருந்தது.
இந்தநிலையில் உலக சராசரி 2014ஆம் ஆண்டு 0.711 புள்ளிகளாகவும், தென்னாசிய சராசரி 0.607 புள்ளிகளாகவும் பதிவுப்பெற்றிருந்தது.
இந்த அறிக்கையின்படி இலங்கையில் பெரும்பாலான அரச பணியாளர்கள் 60 வயதில் ஓய்வுப்பெறுகின்றனர். எனினும் சுயதொழில் மற்றும் நாளாந்த பணியாளர்கள் பல வருடங்களுக்கு பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தொழில்வாய்ப்பின்மை அதிகரிப்பு வீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது அது 12 வீதமாக பதிவுப்பெற்றுள்ளது. இந்த தரப்படுத்தலில் இலங்கை 73 இடத்தில் உள்ளநிலையில் இந்தியா 130 வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நோர்வே, அவுஸ்திரேலியா, சுவிட்ஸர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து ஆகியன முதல் ஐந்து இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளன. மிகவும் மோசமான புள்ளிகளை நாடுகளாக நைகர், எரிட்ரியா, புருண்டி போன்ற நாடுகள் தரப்படுத்தலில் கீழ் மட்டத்தில் உள்ளன.
Post a Comment