Header Ads



உள்ளுராட்சி தேர்தல்கள், 6 மாதங்களுக்கு பிற்போடப்படும் - பைசர் முஸ்தபா

உள்ளுராட்சி மன்றங்கள் சிலவற்றின் உத்தியோகபூர்வ ஆட்சி காலத்தை நீடிக்க அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் காரணமாக அவற்றிற்கான தேர்தல்கள் மேலும் 6 மாதங்களுக்கு பிற்போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பைசர் முஸ்தபா வெளியிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்சினைக்கு இன்னும் தீர்வு கிடைக்க பெறவில்லை.

இது தொடர்பாக நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அந்த கால அவகாசம் அவசியம் என்றும் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் உள்ளுராட்சி மன்ற தேர்தல் இடம்பெறுமாயின், நிலவும் சட்டத்தில் 55 சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.

2 comments:

  1. Srilankan politics at lowest ebb.The politicians are in nest of vipers. There is no creative measure to advocate the country towards progress. The politicians are white-elephants in public view. The politicians actions contrast to their promises. People of Srilanka should have attitudinal change. Otherwise the good-for-nothing politicians will carry on their scandals by deceiving the public. Lets act brothers by pondering that We want statesman and not politicians.

    ReplyDelete
  2. SL.politic total sambaaru

    ReplyDelete

Powered by Blogger.