பொத்துவில் பிரதேசத்துக்கு முழுமையான குடிநீர் விநியோகம், 6 மாதத்தினுள் வழங்கப்படும் - ஹக்கீம்
-மப்றூக் -
பொத்துவில் பிரதேசத்துக்குரிய முழுமையான குடிநீர் விநியோகம், அடுத்த 06 மாத காலத்தினுள் வழங்கப்படும் என்று - நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.
இதேவேளை, நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில் குடிநீரினை வழங்கும்பொருட்டு, நீர்த் தேக்கமொன்றினை உருவாக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபையின் உயர் அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று, அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே, அமைச்சர் ஹக்கீம் மேற்கண்ட விடயத்தினைக் கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்ளூ
'பொத்துவில் பிரதேசத்துக்கான குடிநீர் விநியோகம் போதியளவு வழங்கப்படாமைக்கு தீர்வு காணும் முகமாக, நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மேலதிகாரிகளை அக்கரைப்பற்றுக் காரியாலயத்துக்கு அழைத்து, இன்றைய தினம் தீவிரமாகக் கலந்தாலோசித்துள்ளோம்.
ஏற்கனவே, என்னுடைய பணிப்புரையின் கீழ், பொத்தவில் பிரதேசத்துக்குரிய குடிநீர்த் தேவையினைப் பூர்த்தி செய்வதற்கான பல நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றோம்.
பொத்துவில் பிரதேசத்துக்கான குடிநீரினை நிலத்தடி நீர்க் குழாய்க் கிணறுகளினூடாக வழங்கிக் கொண்டிருக்கின்றோம். ஆயினும், இப்போதைக்கு 04 குழாய்க் கிணறுகள்தான் பாவனையில் உள்ளன.
இதற்கு மேலதிகமாக, மேலும் 05 குழாய்க் கிணறுகளை பிரத்தியேகமாக நிர்மாணிப்பதற்கு கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன.
இவற்றினைப் பூரணப்படுத்திய பின்னர், இப்போதைக்கு வழங்கப்படுகின்ற 1800 கனமீற்றர் அளவிலான குடிநீருடன், இன்னும் 2000 கனமீற்றர் அளவு குடிநீரினை சேர்த்து வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
மேற்படி நடவடிக்கைகள் அடுத்த 06 மாத காலப் பகுதிக்குள் பூரணப்படுத்தப்படும்.
நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில் பாணமை, லகுகலை போன்ற எல்லாப் பிரதேசங்களுக்கும் போதியளவு குடிநீரினை வழங்கும் நோக்குடன், நீர்த் தேக்கமொன்றினை உருவாக்கும் தீர்மானமொன்றினையும் அமுல்படுத்தியுள்ளோம்.
அந்த நீர்த் தேக்கத்தினை அமைத்ததன் பின்னர் சியம்பலாண்டுவ, பொத்துவில், பாணம மற்றுல் லகுகல உள்ளிட்ட அனைத்துப் பிரதேசங்களுக்கும் பூரணப்படுத்தப்பட்ட குடிநீர்த் திட்டமொன்றினை அமுல்படுத்தவுள்ளோம். இதற்கான அனுமதி அமைச்சரவையில் பெறப்படும்.
எனவே, இந்தப் பின்னணியில் அடுத்த 06 மாத காலத்தினுள் பொத்துவில் பிரதேசத்துக்கு, முழுமையான குடிநீர் விநியோகம் வழங்கப்படும்' என்றார்.

பொத்துவில் மக்கலுக்கு நீங்கள் நிரையவே நன்ரிகடன்செலுத்தவேன்டியிருக்கு அது இந்த குடிநீர் பிரட்சனையில் மட்டுமல்ல நீன்டபட்டியல் ஆனாலும் இன்னும் 6மாதம் என்பது காலம்தாழ்ந்த சிந்தனை இருந்தாலும் முடிந்தலவு உங்களால் நிரைந்த சேவை நடைபெறவேன்டும் அப்போதுதான் பொத்துவில் மக்கள் மனங்களீல் காய்ந்துகொன்டிருக்கும் மரக்கிலை துளீர்விடும் என்பது மருக்கமுடியாத உன்மை வாழ்த்துக்கள்........
ReplyDelete