வசீம் தாஜூடீனின் கொலையுடன், தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட உள்ளார்களாம்...!
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலையுடன் தொடர்புடைய ஆறு பேர் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக காவல்துறை உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர் கப்டன் திஸ்ஸவும் இந்த ஆறு பேரில் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களில் மூன்று பேர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த சுரே என்பவரும் இந்தப் படுகொலையுடன் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் சொத்தி உபாலியின் நெருங்கிய உறவினர் என குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட உள்ள ஆறு பேரும் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்ற தடையுத்தரவினை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பெற்றுக் கொண்டுள்ளனர்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 20ம் திகதி தாஜூடீன் கொலை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட முன்னதாக சந்தேக நபர்கள் கைது செய்யப்படலாம் என காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான், குற்றப் புலானய்வுப் பிரிவினருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

Post a Comment