குற்றவியல் தண்டனை சட்டத்தில் திருத்தம் - 6 மனுக்களை நிராகரித்த உயர் நீதிமன்றம்
குற்றவியல் தண்டனை சட்டத்தில் திருத்தங்களை கொண்டு
வரும் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை
விசாரணைகளுக்கு எடுப்பதில்லை உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
சட்டமூலத்திற்கு எதிராக 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன் அவற்றை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மனுக்கள் இன்று ஆராயப்பட்ட போது சட்டமா அதிபர் முன்வைத்த வாதங்களை கவனத்தில் எடுத்து கொண்ட உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் அடங்கிய அமர்வு மனுக்களை விசாரணைக்கு எடுப்பதில்லை என தீர்மானித்தது.
குற்றவியல் தண்டனை சட்டத்திற்கு கொண்டு வரப்படவிருந்த திருத்தச் சட்ட மூலம் ஜனவரி 8ம் திகதி கொண்டு வரப்பட மாட்டாது என சபை முதல்வரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

Post a Comment