Header Ads



கொழும்பில் 68,000 பேர் சேரிபுர வாழ்க்கை, 500 யாசகர்கள், 16,000 நாய்கள் - அமைச்சர் சம்பிக்க

நகரங்களுக்கு இடையில் காணப்படுகின்ற அதிக வாகன நெரிசல் காரணமாக கடந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 397 பில்லியன் ரூபா இழக்கப்பட்டுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

வாகனத்தின் வேகமானது மணிக்கு 20 கிலோமீற்றரிலிருந்து 12 கிலோமீற்றர் வரை குறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் பிரதான நகரமாக கொழும்பு விளங்குகின்ற போதிலும், அங்கு 68,000 பேர் சேரிபுர வாழ்க்கையில் ஈடுபட்டு வருவதாகவும், 500ற்கும் அதிகமான யாசகர்கள் காணப்படுவதாகவும், 16,000 நாய்கள் காணப்படுவதாகவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள நகரங்கள் வேகமாக அபிவிருத்தி அடைந்து வருவதாகவும், கொழும்பை எடுத்துக் கொண்டால், கொழும்பை விடவும் அதனை அண்மித்த நகரங்கள் அபிவிருத்தி அடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நாளொன்றுக்கு 1,32,000 வாகனங்கள் மாத்திரமே கொழும்பு நகருக்குள் பிரவேசிக்க முடியும் எனவும், ஆனால் தற்போது ஐந்து லட்சத்துக்கும் அதிகமாக வாகனங்கள் கொழும்பு நகருக்குள் பிரவேசிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.