Header Ads



பெண்ணொருவரின் கொலை தொடர்பில், கைதானவர் 6 கொலைகள் செய்தவர் என அம்பலமாகியது

கஹவத்தை - கோடகேதன பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர், அப் பகுதியில் இடம்பெற்ற ஆறு கொலைகளுடன் தொடர்புடையவர் என, மரபணு பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.

ஜின்டெக் நிறுவனத்தால் வழங்கப்பட்ட குறித்த மரபணுப் பரிசோதனை அறிக்கையை பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவல்களில் இந்த விடயம் வௌியாகியுள்ளது.

கடந்த வௌ்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்ட இவர், ஞாயிறன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

மேலும், சந்தேகநபருடன் கைப்பற்றப்பட்ட கத்திகள் மற்றும் இரத்தக் கரை படிந்த அவரது ஆடைகள் போன்றன ஜின்டெக் நிறுவனத்திடம் அனுப்பி வைக்கப்பட்டன.

இதன்பின்னர் குறித்த நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனைகளில், முன்னதாக இடம்பெற்ற ஆறு கொலைகளுடன் அவருக்கு தொடர்பிருப்பதாக தெரியவந்துள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும், சமீபத்தைய கொலை தொடர்பான மரபணு பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கப் பெறவில்லை, அந்த அறிக்கையும் பொருந்தினால், சந்தேகநபர் ஏழு கொலைகளுடன் தொடர்படையவர் என தெரியவரும் எனவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவல்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.