Header Ads



வசிம் தாஜூதீன் படுகொலை பிரதான, சந்தேக நபருக்கு கொழும்பில் 5 வீடுகள்

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜூதீனின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரெனக் கருதப்படும் கெப்டன் திஸ்ஸ என்பவர், நாட்டை விட்டுக் கடல் வழியாகத் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளதாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இதற்கு முன்னிருந்த நிர்வாகத்துக்கு ஆதரவு வழங்கும் கடற்படைப் பிரிவிவைச் சேர்ந்த அதிகாரியொருவரின் துணை, இந்த கெப்டன் திஸ்ஸ என்பவருக்கு இருப்பது, விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நீண்ட நாள் ஆதரவாளரும் வாகன சாரதியுமான இவருக்கு, பிரயாணத்தடையை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஏற்கெனவே பெற்றிருந்தது. 

தாஜூதீனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், இந்த நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முடியாத அளவுக்கு குற்றப்புலனாய்வு அதிகாரிகள் இயங்கி வருவதாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 

கெப்டன் திஸ்ஸவுக்கு, கொழும்பில் 5 வீடுகள் உள்ளதாகவும் அவர் எங்கிருக்கின்றார் என்பது தொடர்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாரென்பது அடையாளம் காணப்பட்டு இருப்பினும், அவர்களைக் கைது செய்வதற்கு சிறிது அவகாசம் தேவை என்று, விசாரணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

எவ்வாறாயினும், தாஜூ தீன் தொடர்புடைய வழக்கு, ஜனவரி மாதம் 20ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னர், சந்தேக நபர்கள் அறுவரும் கைது செய்யப்படுவர் என்றும் அறிய முடிகின்றது. 

1 comment:

  1. தப்பிச்செல்லும்வரை கைது செய்ய அவகாசம் உண்டு .

    ReplyDelete

Powered by Blogger.