"உம்றா செய்ய ஏற்பாடு" வரக்காப்பொலயில் பாரிய விபத்து - 5 பேர் மரணம், 22 பேர் காயம்
வரக்காப்பொல தும்பல்தெனிய சந்திக்கு அருகில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
உம்றா செய்வதற்கான பாஸ்போட் உட்பட சில அலுவல்களுக்காக சம்மாந்துறையில் இருந்து கொழும்பு சென்ற முஸ்லிம் குடும்பம் ஒன்றிற்கே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மூன்று பெண்கள் மற்றும் ஒரு சிறு குழந்தை ( இரண்டரை வயது)

இந்த விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளதுடன் வரக்காபொல மற்றும் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரக்காப்பொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களிள் மூவர் பெண்கள் என்பதுடன் வேனின் சாரதி, குழந்தை ஒன்றும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்மாந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வானும் பொல்கஸ்கோவிட்ட பகுதியிலிருந்து பொலன்னறுவை சோமாவதிய யாத்திரைக்காக சிலருடன் பயணித்த தனியார் பேரூந்து ஒன்றுமே இவ்வாறு மோதியுள்ளது.
அம்பாறை மற்றும் கல்முனை பகுதிகளைச் சேர்ந்தவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து தொடர்பில் வரக்காப்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனாஸாக்கள் வறக்காபொல, வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஜனாஸாக்கள் வறக்காபொல, வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
إنا لله وإنا إليه راجعون اللهم اغفرلهم ورحمهم و ادخلهم جنة
ReplyDelete