வேலியை தகர்த்து கிராமத்திற்குள் புகுந்த யானை, 4 நாள் தேடுதலின் பின் பிடிபட்டது
அநுராதபுரம், தளாவ மோரகொட தேக்க வனப்பகுதியில், யானைக்காக கட்டப்பட்ட வேலியை தகர்த்து, கிராமத்திற்குள் புகுந்த யானையை நான்கு நாள் சுற்றி வளைப்பு தேடுதலின் பின்னர், இன்று (19) காலை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் வன விலங்கு அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து, இந்த சுற்றி வளைப்பு தேடுதலில் ஈடுப்பட்டிருந்தனர்.
கைப்பற்றப்பட்ட யானையை ஹொரவபத்தான யானைகள் சரணாலயத்திற்கு அனுப்பவுள்ளதாக வன விலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Post a Comment