4 பேருக்கு மரண தண்டனை
நுவரெலியா மேல் நீதிமன்றம் நேற்று (17) நால்வருக்கு மரண தண்டனை தீர்ப்பளித்துள்ளது.
1996ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி டயகம காவற்துறை பிரிவுக்குட்பட்ட தோட்ட பகுதியில் ஒருவரை கொலை செய்த குற்றத்தின் பேரிலேயே, இவ்வாறு நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட தகராரு காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் 5 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
ஒருவர் நிரபராதி என்று அறிவித்த நீதிமன்றம் ஏனைய நால்வருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
Post a Comment