400 மில்லியன் ரூபா பெறுமதியான அரிசி மாயமாகியது - ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு
கடந்த ஆண்டு சதொச நிறுவனத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட 400 மில்லியன் ரூபா பெறுமதியான அரிசி மாயமாகியுள்ளதாக பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் கடைசிக் காலத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் சதொச நிறுவனம் சுமார் 6.6 மில்லியன் கிலோ அரிசியை இலங்கைக்கு இறக்குமதி செய்திருந்தது.
இதில் சுமார் 300 கன்டெய்னர்களில் கொண்டுவரப்பட்ட 400 மில்லியன் ரூபா பெறுமதியான அரசி துறைமுகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்படும் போது மாயமாக மறைந்துள்ளது.
இதனை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கொழும்பின் முக்கிய வர்த்தகர் ஒருவர் துறைமுகத்திலிருந்து முறைகேடான வகையில் எடுத்துச் சென்றிருப்பதாக தற்போது தெரிய வந்துள்ளளது.
சம்பவம் இது தொடர்பான தீவிர விசாரணைகளை பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.
Post a Comment