40 கோடி பெறுமதியான யானைத் தந்தங்களை, எரிக்க வேண்டாம் - அபயதிஸ்ஸ தேரர்
யானைத் தந்தங்களை எரித்து அழிக்க வேண்டாம் என கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர் கோரியுள்ளார்.
சுமார் 40 கோடி ரூபா பெறுமதியான யானைத் தந்தங்களை எரித்து அழிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும் இந்த தீர்மானம் பிழையானதாகும்.
யானைத் தந்தங்கள் பெறுமதியான பொருள் என்பதனால் அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
முடிந்தால் யானைத் தந்தங்களை விஹாரைகளுக்கு வழங்க முடியும்.
தந்தங்களை பாதுகாக்க முடியாவிட்டால் அது தொடர்பான கைத்தொழில்களை மேற்கொள்ள முடியும்.
யானைத் தந்தங்களை அழிப்பதனால் ஏற்படக்கூடிய இயற்கை பாதிப்பு குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, சயிடீஸ் சர்வதேச உடன்படிக்கையின் அடிப்படையில் யானைத் தந்தங்களை வைத்திருக்க முடியாது என்ற காரணத்தினால் எதிர்வரும் 26ம் திகதி காலி முகத்திடலில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னிலையில் குறித்த யானைத் தந்தங்கள் அழிக்கப்படவுள்ளதாக அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
1.5 டொன் எடையுடைய யானைத் தந்தங்கள் கென்யாவிலிருந்து டுபாய் எடுத்துச் செல்லும் வழியில் இலங்கை சுங்கப் பிரிவினர் கடந்த 2012ம் ஆண்டு யானைத் தந்தங்களை மீட்டிருந்தனர்.
அபாயகரமான பொருளாயிருந்தால் அழிப்பது நியாயம்.
ReplyDeleteஆனால் இங்கு 40 கோடி ரூபா பெறுமதி, 1500 கிலோ தந்தங்கள். இப்போ யானைக்கும் பிரயோசனமில்லை, கடத்தினவனுக்கும் பிரயோசனமில்லை, பிடித்தவனுக்கும் பிரயோசனமில்லை. கலாநிதி தேரர் கோரிக்கை நியாயமானதுதான் ஒன்றைத்தவிர. அரசாங்கமே வைத்திருக்க முடியாதென்றால் விகாரைகள் என்ன விதிவிலக்கா?அதுசரி விகாரைகளுக்கு எதுக்கு தந்தம்??