Header Ads



"முதலமைச்சருக்கு நேரம் இல்லையாம்" 4 அமைச்சர்களின் இல்ல திருமணங்கள் ரத்து

தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ள இயலவில்லை என்பதால் 4 அமைச்சர்களின் இல்ல திருமணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

தமிழக அமைச்சர்களான வைத்திலிங்கம், காமராஜ், முக்கூர் சுப்பிரமணியன் மற்றும் சண்முகநாதன் ஆகிய நால்வரும், தங்களின் பிள்ளைகள் திருமணத்தை நடத்தி வைக்க ஜெயலலிதாவிடம்  தேதி கேட்டு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து முதல்வர் அமைச்சர்களின் இல்ல திருமணங்களில் பங்கேற்பதாகக் கூறி   டிசம்பர் 6 ம் தேதியை முகூர்த்த நாளாகவும் நிர்ணயித்து,திருமண ஏற்பாடுகளை நடத்த அனுமதியளித்துள்ளார்.இதனையடுத்து திருமண வேலைகள் தடபுடலாக நடந்து வந்தது.

முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, எம்.எல்.ஏ.க்கள் குணசீலன், சம்பத்குமார், வைரமுத்து, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜன் போன்றோரின் இல்ல திருமணத்திற்கும், அதே தேதியைத்தான் முதல்வர் கொடுத்திருந்தார். அமைச்சர் வைத்திலிங்கம், தன் மகள் பிரதிபாவின் வரவேற்பு நிகழ்வை, தஞ்சாவூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் மாநகராட்சி மைதானத்தில் நடத்தவிருந்தார். இதற்காக 20 ஏக்கரில் பிரமாண்டமாகப் பந்தல் அமைக்கும் பணி நடந்து வந்தது.

ஆனால், வெள்ளம் பாதித்த பகுதிகளை 45 நிமிட காலம் ஹெலிகாப்டரில் இருந்து பார்வையிட்டார் ஜெயலலிதா. இன்னும் வெள்ளம் வடியாத நிலையில், திருமணத்திற்கு மட்டும் நேரில் சென்று வாழ்த்தினால், மக்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டிவரும் என்று நினைத்து, திருமணத்தை ஒத்திவைக்க அமைச்சர்களிடம் ஜெயலலிதா அறிவுறுத்தியதாகக்  கூறப்படுகிறது.

இதையடுத்து  தற்போது அமைச்சர்களின் இல்ல திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளின் குடும்பத்தார் மத்தியில் வருத்தம்  நிலவுவதாகக் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.