'வசீம் தாஜுதீன் கொலை' கமரா காட்சிகளடங்கிய 4 CD கள் சமர்பிப்பு - வெளிநாட்டு உதவிபெற அனுமதி
ரக்பி வீரர் மொஹமட் வசீம் தாஜுதீன், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான CCTV பாதுகாப்பு கெமரா காட்சிகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்றைய தினம் (10) கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தாஜுதீன் கொலை தொடர்பான CCTV காட்சிகள் அடங்கிய 4 இறுவட்டுகளை (CD) இரகசிய பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தனர். குறித்த இறுவட்டுகளை ஆராய்ந்து, எதிர்வரும் 14 நாட்களுக்குள் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு, கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு நீதவான் உத்தரவிட்டார்.
மேலும், குறித்த காட்சிகள் தொடர்பில், வெளிநாட்டு வல்லுனர்களின் உதவிகள் தேவைப்படின், அதனையும் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்குவதாக, நீதவான் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment