"றிசாத்திக்கு 3 நிபந்தனைகள்"
-ARA.Fareel -அமைச்சர் ரிசாத் பதியுதீன் கோரும் நஷ்ட ஈடு 100 கோடி ரூபாவை நான் வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றேன். நாட்டு மக்கள் ஒவ்வொருவரிடமிருந்து 100 ரூபா வீதம் சேகரித்து 100 கோடி ரூபா கொடுப்பேன் என தேசிய சங்க சம்மேளனத்தின் செயலாளர் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்தார்.
நஷ்ட ஈடு 100 கோடி ரூபா வழங்குவதற்கு ஆனந்த சாகர தேரர் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு மூன்று நிபந்தனைகளையும் விதித்துள்ளார். வில்பத்து தேசிய வனத்தை அழிப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், போதைப் பொருள் வியாபாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்களைக் கைவிட்டு தேசிய பாதுகாப்புக்கு உறுதி வழங்க வேண்டும் என்பனவே அந்த நிபந்தனைகளாகும்.
ஆனந்த சாகர தேரர் இது தொடர்பில் ‘Vi’க்கு கருத்துத் தெரிவிக்கையில் ‘ அமைச்சர் ரிசாத் பதியுதீன் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் பசில் ராஜபக்ஷவின் உதவியுடன் வில்பத்துவை அழித்து முஸ்லிம்களுக்கு காணிகளைப் பகிர்ந்தளித்து வந்தார்.
வில்பத்து பிரதேசத்தில் கல்லாறு, மறிச்சுக்கட்டி பிரதேசங்கள் முழுமையாக வில்பத்துவுக்குச் சொந்தமானதாகும்.
வில்பத்து அழிவு தொடர்பாக நாம் அறிக்கையொன்றினைத் தயாரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்தோம். ஆனால் ஜனாதிபதியினால் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
ஜனாதிபதி தான் யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றினை மேற்கொண்ட போது வில்பத்து வனப் பிரதேசம் அழிக்கப்பட்டுள்ளதை நேரில் கண்டதாகவும் காடழிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். வில்பத்து பிரதேசத்தில் காடழிப்பதை நிறுத்தும் படியும் அமைச்சர் ரிசாதுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் அது நிறுத்தப்படவில்லை. அங்கு தொடந்தும் முஸ்லிம்கள் குடியேற்றப்பட்டு வருகிறார்கள்.
நாம் வில்பத்து காடழிப்புக்கு எதிராக குரல் கொடுத்தால் ரிசாத் இதை இனவாதமாக்குகிறார். இங்கே சாதி, சமயம், இன பிரச்சினையில்லை. இது தேசிய பிரச்சினையாகும்.
தமிழ், முஸ்லிம் சிங்களவருக்குரிய பிரச்சினையாகும். இங்கு முஸ்லிம்கள் மீள் குடியேற்றப்படவில்லை. இங்கு குடியேற்றங்கள் புதிதாகவே நடைபெறுகின்றன. புதியவர்களே குடியேற்றப்படுகிறார்கள்.
வடக்கு, கிழக்கில் மக்கள் குடியேற்றப்படுவதற்கு ஏராளமான நிலங்கள் இருக்கின்றன. அப்பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் இருக்கின்றன.
என்றாலும் எவ்வித உட்கட்டமைப்பு அடிப்படை வசதிகளுமற்ற இந்தக் காட்டில் முஸ்லிம்களை ரிசாத் கொண்டு வந்து போடுகிறார்.
இவரது தவறான செயல்கள் பற்றி மக்கள் பேசுவதில்லை அவர்கள் பயந்து போயிருக்கிறார்கள்.
வில்பத்து பிரதேசத்துக்கு அண்மித்த கடற்பரப்புக்கு போதைப் பொருட்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்படுகின்றன. அப்போதைப்பொருட்கள் வில்பத்து பாதையூடாக ஏனைய பிரதேசங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதில் ரிசாத் பதியுதீனின் கையாட்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புப் பிரதேசங்களில் மக்கள் குடியேற்றப்படுகின்றார்கள். இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பிலான அனைத்து ஆதாரங்களும் எம்மிடம் இருக்கின்றன.
அவற்றை நாம் விரைவில் பொலிஸாரிடம் சமர்ப்பிப்போம் என்றார்.
This is another comedian...!!!
ReplyDeleteNo boundary to mouth... it can utter any lie... as they do not know the fear of Hell since they do not believe the life after the death.
ReplyDeleteRev.Aanentha Their is working as a coordinator of the Drugs Prevention Unit in the Presidential Secretariat. He is collecting information related with Drugs business parties
ReplyDeleteஅட எருமை அப்படி ஆதாரம் இருந்தால் முதலில் அதை போலீசில் ஒப்படை அவர்கள் சட்டத்தை அமுல் படுத்தட்டும்.
ReplyDeleteThis type of racist should be punished.What does he know about Marichchukatty?
ReplyDeleteJUST LOOK AT HIS EYES..... GOD WILL PUNISH HIM SOON.
ReplyDeleteALLAH WILL GIVE MORE POWER TO Mr. rishard
அட கழுத ஆதாரத்தை அள்ளி போடு முடிந்தால் நிருபித்து காட்டு சட்டம் அதன் கடமையை செய்யும் விஷேஷமாக முஸ்லிம் என்றால் ஒரு முடர் தண்ணீர் கூடுதல் குடிக்கும் சட்டம் ,
ReplyDelete