Header Ads



ஈரானை அச்சுறுத்தும் பன்றிக் காய்ச்சல் - 33 பேர் பலி

ஈரானின் தென்கிழக்கு மாகா­ணங்­களில் பன்றிக் காய்ச்சல் காரணமாக  குறைந்­தது 33 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அந்­நாட்டு அர­சாங்க ஊடகம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.
கடந்த 3 வார காலப் பகு­தியில் இந்த எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது. மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேற்­படி பன்றிக் காய்ச்­சலால் கெர்மன் மாகா­ணத்தில் 28 பேரும் சிஸ்டன் பலு­சிஸ்டான் மாகாணத்தில் 5 பேரும் பலி­யா­கி­யுள்­ள­தாக ஈரா­னிய பிரதி சுகா­தார அமைச்சர் அலி அக்பர் சேயாரி தெரி­வித்தார்.

இந்தப் பன்றிக் காய்ச்­ச­லா­னது நாட்டின் ஏனைய பிராந்­தி­யங்­க­ளுக்கும் பரவும் அபாயம் நிலவுவதாக அவர் எச்சரித்துள்ளார்.

மேலும் பன்றி காய்ச்சல் பரப்பும் வைரஸ் உடலில் பரவியதும் சளி பிடிக்கும். உடனே காய்ச்சல் வரும், தொண்டை வலி, சோர்வு, உடல் வலி, பசியின்மை போன்றவை வரும். முதல் 5 நாட்களுக்குசாதாரண காய்ச்சல் போல இருக்கும். பின்னர் காய்ச்சல் கடுமையாகும். தாங்க முடியாத உடல்வலி, வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படும்.

இந்த நோய் ஏற்பட்டு இருப்பதை சாதாரண முறை சோதனைகளால் கண்டுபிடிக்க முடியாது. பல்வேறு கட்ட சோதனை நடத்தினால்தான் தெரியவரும்.

நோய் தாக்கியவரிடம் இருந்து வைரஸ் மற்றவர்களுக்கும் வேகமாக பரவும். சளி மூலம் அதிக அளவில் பரவும். நோய் தாக்கியவர் உமிழ் நீர், சளியை தொட்டு விட்டு கை கழுவாமல் மற்றவரை தொட்டால் அதன் மூலமும் பரவி விடும். எனவே நோய் தாக்கியவரை தனிமை படுத்தினால்தான் மேலும் பரவாமல் தடுக்க முடியும் என்றார்.

No comments

Powered by Blogger.