3 நாட்களில் 5 கோடி ரூபாய் வருமானம் - இலங்கையில் சாதனை படைக்கும் அதிவேக பாதைகள்
தென்னிலங்கை அதிவேகப் பாதையில் மூன்றே நாட்களில் ஐந்து கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அதிவேகப் பாதை நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை தொடக்கம் வார இறுதி நாட்கள் வரை தொடர்ச்சியான விடுமுறை காரணமாக பெரும்பாலான பொதுமக்கள் தென்னிலங்கையின் சுற்றுலா மற்றும் ஆன்மீகத் தலங்களுக்குப் படையெடுத்திருந்தனர்.
இதன் காரணமாக கடந்த வியாழன் தொடக்கம் சனிக்கிழமை வரையான மூன்று நாட்களுக்குள் தென்னிலங்கை அதிவேகப் பாதையில் ஐந்து கோடி ரூபாய்க்கும் மேலாக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
பொதுவாக ஏனைய நாட்களில் இப்பாதையைப் பயன்படுத்துவோரிடமிருந்து அறவிடப்படும் வரி காரணமாக தினமொன்றுக்கு 100 தொடக்கம் 1110 லட்சங்கள் வரை வருமானம் கிடைத்து வருகின்றது.
எனினும் கடந்த விடுமுறை நாட்களில் இந்த வருமானம் 150 தொடக்கம் 170 லட்சங்கள் வரை அதிகரித்துள்ளது. கடவத்தையிலிருந்து தென்னிலங்கை அதிவேகப் பாதைக்கான இணைப்புப் பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளதும் இந்த வருமான அதிகரிப்பிற்கான ஒரு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment