சுவிஸ் வங்கிகளில் 2 பில்லியன் பிரான்க் - இலங்கையர் பற்றிய விபரங்கள் வெளியாகிறது
சுவிட்சர்லாந்து வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்திருக்கும் இலங்கையர்கள் பற்றிய விபரங்களை வெளியிட இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத வழிகளில் ஈட்டப்படும் கறுப்புப் பணத்தை வைப்பிலிடும் சகல இலங்கையர்கள் பற்றிய விபரங்களையும் அரசாங்கத்திடம் வழங்க சுவிட்சர்லாந்து இணங்கியுள்ளது.
அடுத்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு வைப்பாளர்கள் பற்றிய விபரங்களை அம்பலத்தப்படுத்த சுவிட்சர்லாந்து பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதனால் நீண்ட காலமாக காணப்பட்ட சுவிட்சர்லாந்து வங்கிகளின் இரகசியத்தன்மை ரத்தாகின்றது.
கடந்த காலங்களில் இலங்கையர்கள் இரண்டு பில்லியன் பிரான்க் பணத்தை சுவிட்சர்லாந்து வங்கிகளில் வைப்புச் செய்துள்ளனர்.
இலங்கையின் சில அரசியல்வாதிகளும் அவர்களுடன் தொடர்பு பேணி வரும் வர்த்தகர்களும் சுவிட்சர்லாந்து வங்கிகளில் கறுப்புப் பணத்தை வைப்புச் செய்து பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தினரும் வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை வைப்புச்செய்துள்ளதாக பரவலாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Ithu maithiri vituku pohum varie varum news no chance
ReplyDelete