மீண்டும் சாதித்தார் இம்ரான்கான், 2 வது புற்றுநோய் வைத்தியசாலையை திறந்த புற்றுநோய் சிறுவன்
நன்கொடைகள் உதவியுடன் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல் தலைவருமான இம்ரான் கான் கட்டியுள்ள இரண்டாவது புற்றுநோய் மருத்துவமனை பெஷாவர் நகரில் திறந்து வைக்கப்பட்டது.
புற்றுநோயாளியான சிறுவன் ஃபக்கீர் அஃப்ரிடியுடன் இணைந்து அவர் அந்த மருத்துவமனையை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
ஏற்கெனவே, இம்ரான் கானால் கட்டப்பட்ட புற்றுநோய் மருத்துவமனை லாகூரில் கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
இந்த மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
புற்றுநோயால் மரணமடைந்த தனது தாயார் ஷெளகத் கானும் நினைவாக இந்த மருத்துமவமனைகளை இம்ரான் கான் கட்டியுள்ளார்.
Post a Comment