முஜுபுர் ரஹுமானுக்கு, கொலை அச்சுறுத்தல் - 2 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க சபாநாயகர் உத்தரவு
பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹுமானுக்கு பாராளுமன்றத்தில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் சிறப்புரிமை குழுவிற்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.
தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹுமான் பாராளுமன்றத்தில் இன்று 12 சிறப்புரிமை தொடர்பான கேள்வியொன்றை எழுப்பினார்.
இதையடுத்தே, சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற சிறப்புரிமை குழுவிற்கு இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹுமான் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் வசிம் தாஜிடீன் கொலை சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்க முயற்சித்த வேளையில் பாராளுமன்றத்தில் அமளிதுமளி ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற நடவடிக்கைகள் இருவேறு சந்தர்ப்பங்களில் சில நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மரண அச்சுறுத்தல் எதிர்தரப்பிலிருந்தே விடுக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹுமான் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்தே சபாநாயகர் கருஜயசூரிய விசாரணைகளை நடாத்துவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment