Header Ads



2 இஸ்லாமிய இளைஞர்கள், ஆட்டோவில் சென்றபோது..!

சென்னையில் 10.12.2015 காலை அதிராம்பட்டிணத்தை சேர்ந்த இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள் ஆட்டோவில் சென்றுள்ளனர்.

இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் இருவரும் பணத்தை கொடுத்தபோது ஆட்டோ டிரைவர் பணத்தை வாங்க மறுத்து விட்டார்.

ஏன் அண்ணே பணம் வேண்டாம் என்கிறீர்கள் என்று இவர்கள் கேட்டவுடன்..,

பாய்மார்கள் இருக்கப்போய்தான் இந்த வெள்ளத்திலிருந்தே உயிர் பிழைத்தோம், எங்களை வாழ வைத்த உங்களிடம் எப்படி தம்பி பணம் வாங்குறது என்றார் ஆட்டோ டிரைவர்.

அண்ணே… இது மனிதனுக்கு மனிதன் செய்யவேண்டிய கடமை, இதை எங்கள் மார்க்கம் (இஸ்லாம்) எங்களுக்கு கடமையாக்கியுள்ளது, அதை தான் செய்தோம் என்று சொல்லி இவர்கள் பணம் கொடுக்கும் போது...,

அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது, அதனை கண்ட இவர்களின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது.

இஸ்லாம் கடமையாக்கிய சேவையை செய்தோம், நல்லுள்ளங்களை வென்றெடுத்து விட்டோம் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

முஸ்லிம்களின் சேவையை கண்டு இந்து சொந்தங்கள் கண்ணீர் மல்க புகழ்வதும், அதனைக்கண்டு முஸ்லிம்கள் கண்ணீர் மல்க பொங்குவதும் என்று கடந்த 20 நாட்களாக கண்ணீர் சம்பவங்களாகவே நடக்கிறது.

இறைவன் இந்த ஒற்றுமையை இறுதிவரை ஏற்படுத்துவானாக....!

2 comments:

  1. May Allah Bless those involved in thos duety purely for the sake of Allah and his religion.

    ReplyDelete
  2. உண்மையில் ஒரு சில வம்பர்களை (அதிலும் சினிமாக்கார வம்பர்கள்) தவிர தமிழ்நாட்டு தமிழர்கள் மனட்சாட்சியுள்ளவர்கள்தான்! அதனால்தான் இதுவரை அவர்கள் முஸ்லிம்களோடு ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால்... வேதனை, இலங்கையில் இவ்வாறான தமிழ் மக்களை, அதுவும் வடகிழக்கில் காண்பது மிக அரிதுதான்! அது உண்மையில் (நாங்கள் தினம் அனுபவப்படுவதை வைத்தே கூறுகிறேன்) மிகவும் வேதனையளிக்கிறது! அவ்வாறு சிலர் மனட்சாட்சியோடு நடக்க முற்பட்டாலும் இனவாத தமிழ் அரசியல்வாதிகள் குழப்பிவிடுகிறார்கள்!

    ReplyDelete

Powered by Blogger.