பஸ் இறக்குமதியில் 2.86 பில்லியன் ரூபாய் ஊழல் - முறைப்பாடு செய்த பிரதியமைச்சர்கள்
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் குமார வெல்கமவுக்கு எதிராக இரண்டு பிரதியமைச்சர்கள் 01.12.2015 லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டை செய்தனர்.
ரஞ்சன் ராமநாயக்க மற்றும் அசோக் அபேசிங்க ஆகியோரே இந்த முறைப்பாட்டை செய்தனர்.
முன்னைய ஆட்சியின் போது 2013இல், 2200 பஸ்களை இறக்குமதி செய்தததில் 2.86 பில்லியன் ரூபாய்கள் ஊழல் இடம்பெற்றதாக கூறியே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பஸ்களின் பெறுமதி 30000 டொலர்களாகும். தீர்வையையும் சேர்த்து 40000 டொலர்கள் என பெறுமதியிடப்பட்டது
எனினும் முன்னாள் அமைச்சர் பஸ் ஒன்றுக்கு 50000 டொலர்களை விலையாக குறிப்பிட்டுள்ளதாக முறைப்பாட்டின் பின்னர் ரஞ்சன் ராமநாயக்க ஊடகங்களிடம் தெரிவித்தார்.
Post a Comment