ஈராக்கில் 25 வருடங்களுக்கு பின், சவூதி அரேபிய தூதரகம்
சவூதி அரேபியா தனது பக்தாத் தூதரகத்தை 25 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் திறந்தது. ஈராக் குவைட்டை ஆக்கிரமித்ததை அடுத்தே சவூதி மற்றும் ஈராக் இராஜதந்திர உறவு முறிந்தது.
சவூதி தூதுவ அதிகாரிகள் பக்தாதை சென்றடைந்திருப்பதாக சவூதி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதில் ஈராக்கிற்கான சவூதி தூதுவர் இன்று வியாழக்கிழமை அங்கு செல்லவுள்ளார். ஈராக்கின் சுயாட்சி பெற்ற குர்திஷ் பிராந்திய தலைநகரான எர்பிலில் சவூதிய துணைத்தூதரகம் ஒன்றும் திறக்கப்படவுள்ளது.
1990 ஆம் ஆண்டு சவூதி மற்றும் ஈராக்கிற்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் முறிந்தபோதும் 2004 ஆம் ஆண்டு அமெரிக்க ஆக்கிரமிப்பில் சதாம் ஹுஸைன் பதவி கவிழ்க்கப்பட்ட பின் அது வழமைக்கு திரும்பியது.
எனினும் ஈரான் ஆதிக்கம் கொண்ட ஷியா பெரும்பான்மை நாடான ஈராக்கிற்கும் சுன்னி வல்லமை நாடான சவூதிக்கும் இடையிலான உறவில் தொடர்ந்து முறுகல் உள்ளது. கடந்த ஆண்டு ஈராக்கின் கணிசமான நிலத்தை கைப்பற்றிய இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவுக்கு சவூதி உதவுவதாக ஈராக் அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
Post a Comment