Header Ads



வசீம் தாஜூடீனின் கொலை தொடர்பான முழு அறிக்கை, 20 ஆம் திகதி நீதிமன்றத்தில்

பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் கொலை தொடர்பான முழுமையான அறிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிக்கையின் ஊடாக தாஜூடீனின் கொலையாளிகள் யார் என்பது குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படவுள்ளது.

மூன்று வாரங்களுக்கு முன்பு  குற்றவாளிகளை அடையாளம் காண முடிந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவல்கள் மேலும் கூறியுள்ளன.

தீப்பிடித்து எரியும் வாகனத்திற்கு அருகில் செல்ல முயற்சித்தவர்களை தடுத்த நபர் ஒருவர் சாட்சியாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தாஜூடீன் கொலையுடன் தொடர்புடையதாக கூறப்படும் ராஜபக்ஸவினரின் சாரதி  திஸ்ஸ என்பவர் கைது செய்யப்படவுள்ளதாக கூறப்பட்ட போதிலும் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்த கொலையில் முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த  ராஜபக்ஸவின்  புதல்வருக்கு தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.

1 comment:

Powered by Blogger.