இம்முறை முதன்முறையாக ஹஜ், கடமையை மேற்கொள்பவர்களுக்கே முன்னுரிமை
அடுத்த வருடம் ஹஜ் கடமையை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பவர்கள் இம்மாத (டிசம்பர்) இறுதிக்குள் தமது விண்ணப்பங்களை முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டப்பட்டுள்ளனர்.
திணைக்களத்துக்கு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் இலக்கமிடப்பட்டு பதிவு செய்யப்படுமென்றும், அடுத்த வருட ஹஜ் கடமைக்கு புதிய விண்ணப்பங்களிலிருந்தே ஹஜ்ஜாஜிகள் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் தெரிவித்தார்.
இனிவரும் காலங்களில் முதன்முறையாக ஹஜ் கடமையை மேற்கொள்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுமெனவும் ஏதேனும் விசேட காரணங்களுக்காக ஒரு முறைக்கு மேல் ஹஜ் கடமையை மேற்கொள்ள விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமெனவும் குறிப்பிட்டார்.
I don't know why,the cost of hajj is increasing in every year.no chance for middle class people to go hajj in this country.
ReplyDelete