கத்தாரில் தமிழ் பேசுவோருக்கான இஜ்திமா - 2015
- MOHAMED AJWATH -
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் ஏக இறைவன் அல்லாஹுவின் திருப்பெயரால் !
ஒருமனிதன் இவ்வுலகில் வாழும்போது எப்பொழுதும் தீமையில் இருந்து விடுபட்டு ஒதுங்கி வாழ வேண்டும் என்பது அல்குர்ஆன் சுன்னாவினது போதனையாகும். நன்மை செய்யும் சமூகமே இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெரும்.
கடல் கடந்து வந்து கத்தாரில் தொழில் புரியும் தமிழ் பேசும் இலங்கை மற்றும் இந்திய சகோதரர்களிட்கான “இஜ்திமா” எதிர்வரும் வெள்ளிக்கிழமை (25-12-2015) காலை முதல் இஷா தொழுகை வரை கத்தாரில் செனஇய்யா-10 இல் அமைந்துள்ள மர்கஸில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இலங்கை மற்றும் இந்தியாவினை சேர்ந்த உலமாக்களினால் மார்க்க உபநியாசங்கள் நிகழ்த்தப்பட இருக்கின்றமையினால் பயன்மிக்க இந்நிகழ்வை உங்கள் வருகையால் மேலும் பெறுமதியான நிகழ்வாக மாற்ற கடல் கடந்து வாழும் தமிழ் பேசும் சகோதரர்கள் தவறாமல் சமூகமளிக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கின்றீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதையே செய்ய ஏவுகிண்றீர்கள்; தீயதை விட்டும் விலகுகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின் மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்" (அல்குர்ஆன் 03:110)
Post a Comment