இலங்கையில் 20 மாணவர்களுக்கு எயிட்ஸ்
இலங்கையில் தற்போது 20 மாணவர்கள் HIV தொற்றுக்கு இலக்காகி, எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள HIV தொற்றாளர்கள் தொடர்பில், வாய் மூலமான பதிலை எதிர்பார்த்து டலஸ் அளகப்பெருமவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
மேலும், சுகாதார பாடத்தை மாணவர்களிடையே கட்டாயமாக்க வேண்டுமெனவும், க.பொ.த. சாதாரண தர பரீட்சையில், சுகாதார பாடத்தில் சித்தியடைவது கட்டாயமான தகைமையாக கருதப்படும் எனவும் தெரிவித்தார்.
Post a Comment