மைத்திரிக்கு ஏமாற்றம் - 2 கோரிக்கைகளையும் நிராகரித்த, மகிந்த ஆதரவாளர்கள்..!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆதரவாளர்கள் நிராகரித்துள்ளனர். வரவு செலவுத்திட்டத்தில் வாக்களிப்பது தொடர்பிலான ஜனாதிபதியின் கோரிக்கைகளே இவ்வாறு, கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்திருந்தது. பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது விரும்பியவாறு வாக்களிக்க அனுமதியளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறெனினும், இன்றைய தினம் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை சந்தித்த போது வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டாம் எனவும், தேவையென்றால் வாக்களிப்பில் பங்கெடுக்காமல் இருக்குமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியிருந்தார்.
எனினும், இந்த இரண்டு கோரிக்கைகளையும் நிராகரித்த கூட்டு எதிர்க்கட்சியினர் வரவு செலவுத்தி;ட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.
கட்சியின் தீர்மானத்திற்கோ அல்லது ஜனாதிபதியின் கோரிக்கைக்கோ மஹிந்த ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் மதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment