Header Ads



ஜப்பான் வழங்கும் 1 பில்லியன் டொலரில், கண்டியை அபிவிருத்திசெய்ய ஹக்கீம் பணிப்புரை

ஜப்பான் வழங்கும் ஒரு பில்லியன் டொலர் பாரிய நிதியுதவியுடன் கண்டி நகரை அபிவிருத்தி செய்வதற்கு முழுமையான செயல்திட்டமொன்றை துரிதமாகத் தயாரிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உயரதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
பிரஸ்தாப நிதியுதவியை வழங்க முன்வந்துள்ள ஜப்பானிய உயர்மட்டக்குழு எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி இலங்கை வரவுள்ளதால் அதற்கு முன்னர் உரிய செயல்திட்டத்தை தயாரித்து முடிக்குமாறும் அமைச்சர் ஹக்கீம் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

வெள்ளிக்ழமை (11) பிற்பகல் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சில் கண்டி நகர அபிவிருத்தி தொடர்பான பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கண்டி நகர போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான வழிவகைகள், மாற்று வீதிகளை அமைத்தல், யுனொஸ்கோவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மரபுரிமை நகரான கண்டியில் வசதி குறைந்த சேரி வாழ் மக்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளல் மற்றும் கலையம்சம் பொருந்திய தபால் நிலையக் கட்டடத்தை சம்பந்தப்பட்ட அமைச்சரின் ஒத்துழைப்புடன் நவீன மயப்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் இக்கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டன.

அமைச்சின் செயலாளர் பீ.எம்.யூ.டீ. பஸ்நாயக்க, செயல்திட்ட செயலாளர் என்.டீ.ஹெட்டிஆராச்சி மற்றும்  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, விவசாயத் திணைக்களம், கண்டி மாநகர சபை ஆகியவற்றின் உயரதிகாரிகள் உட்பட பலர் இதில் பங்குபற்றினர்.

ஜெம்சாத் இக்பால்


6 comments:

  1. What a surprise! Still he a Kandy MP! Oh local government election is on march right?

    ReplyDelete
  2. I strongly opposing this rauf hakeem.if srilanka muslim congress really represent muslims he is not suitable for the post from islamic perspective as well most slmc mps.

    ReplyDelete
  3. தலைவரே கல்முனை நகர அபிவிருத்தி எண்டு கதைச்சீங்களே , ஊருக்காவது வருவீங்களா ???

    ReplyDelete
  4. ஞான சித்தமான முடிவுகளை முஸ்லிம்களுக்காக எடுக்கும் முற்போக்கற்ற முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் காலங்களில் பகிரங்கமாக அம்பாறைக்கும் மற்றும் சுழற்சி முறையில் வன்னி, திருகோணமலைக்கும் தேசியப்பட்டியல் உறுப்புரிமை வழங்குவோம் என்று தொண்டை கிழிய கத்தி கத்தி பிரச்சாரம் செய்து வந்தனர்.

    பிரச்சாரத்திற்கு செல்கின்ற இடமெல்லாம் தேசியப்பட்டியல் தருவேன் என்று மிட்டாய் வாங்கித் தருகிறேன் என்று சொல்வது போல முஸ்லிம் காங்கரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியிருந்தார். இதில் என்ன புதினம் என்றால் எந்தவொரு நிபந்தனையுமில்லாமல் வெறும் தேசியப்பட்டியல் உறுப்புருமைக்காக வாக்களித்த அம்பாறை மற்றும் திருகோணமலை, வன்னி முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவதாளர்கள் தங்களுக்கான கோரிக்கை நிறைவேறாததை மறந்துவிட்டனர். இது புதிதல்ல இப்படி ஒவ்வாரு தேர்தல் காலத்திலும் ஹக்கீம் மாவரைப்பதும் பிறகு மாப்புழுச்சி போவதும் வழமையான ஒன்று.

    அம்பாறையில் அட்டாளைச்சேனைக்கு வழங்குவதாக வாக்களித்த ஹக்கீம், அக்கரைப்பற்றிற்கு மாகாண சுகாதார அமைச்சு தருவதாக மறைமுகமாக மேடைகிளில் கூறிவந்தார். தேர்தல் முடிவுற்றது. தேசியப்பட்டியல் ஒன்று ஹக்கீமின் சகோதரரருக்கும் இன்னொன்று தன்னுடைய பிரத்தியேக மற்றும் கட்சியின் அலுவலக வேலைகள், சட்ட கோவைகள், ஹக்கீமின் வெளிநாட்டு உரைகளை வடிவமைப்பவர் ஒருவருக்கும் வழங்கப்பட்டது.

    அட்டாளைச்சேனை மக்கள் முற்றுமுழுதாக எம்.பிக்காகவே வாக்களித்தனர், அக்கரைப்பற்று ஆதரவாளர்கள் சுகாதார அமைச்சருக்காக வாக்களித்தனர். இரண்டுமே எட்டாக்கனியாகியது. முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ்விடமிருந்து கொப்புத்தாவிய ஏ.எல் தவம் எப்படியோ மாகாண அமைச்சு கிடைத்துவிடும் என்று நினைத்திருந்தார். அதே போல மாகாண சபைஉறுப்பகினர் நஸீர் தேசியப்பட்டியல் கிடைக்குமென்று மலையாய் நம்பியிருந்தார்.

    தலைவரின் சாணக்கியம் (சாணீக்கியம்) எப்படி இறுதியில் அமைந்திருந்தது என்றால் கட்சிக்குள் புதியவருக்கு மாகாண அமைச்சுப்பதவி தகுந்ததல்ல அப்படி வழங்கப்படின் கட்சிக்குள் முறுகல் வரும், நஸீருக்கு மாகாண அமைச்சுப்பதவி வழங்கப்படுவதே சிறந்தது என்று புதிய புரளி ஒன்றை கிளப்பியிருந்தார். இறுதியில் இதுவே அரங்கேறியது.

    அக்கரைப்பற்று ஆதரவாளர்கள் மிக சொற்ப எண்ணிக்கைதான். அட்டாளைச்சேனை முதல் நிந்தவூர் ஆதரவாளர்கள் தொகை அதிகம் அவர்களை நஸீரின் தேசியப்பட்டியலால் மௌனியாக்கினார் அமைச்சர் ஹக்கீம். ஆதரவாளர்கள் மறந்திருக்கிற இக்காலப்பகுதியில் செயலாளர் ஹசன் அலிக்கும், முன்னாள் பிரதியமைச்சர் பசீர் சேகுதாவுதுக்கும் தேசியப்பட்டியல் வழங்கப்படவுள்ளது. இதுதான் சாணக்கியம்!

    மடையர்கள் இருக்கும்வரை மடையர்களாக்கிக் கொண்டே இருப்பார்கள்

    ReplyDelete
  5. கிழக்கு வாழ் முஸ்லிம்களே இப்போதாவது உங்களுக்கு விளங்க வில்லையா?

    ReplyDelete
  6. Dear Muslims stop dividing according to geography.
    He should spend that money where it is necessary.

    ReplyDelete

Powered by Blogger.