1992 இல் பாபரி மஸ்ஜித்தை இடிக்க ஓடியவர், பள்ளிவாசலில் இன்று ஜும்ஆ பயான் செய்தார் (படம் இணைப்பு)
1992 டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித்தின் கூம்பை இடிக்க முதல் ஆளாக ஓடிய பல்பீர்சிங்...
2015 டிசம்பர் 18 நாகர்கோவில் பள்ளிவாசலில் ஜும்ஆ பயான் செய்த முஹம்மது ஆமீர்...
பல்பீர்சிங் இஸ்லாத்தை ஏற்று முஹம்மது ஆமீர் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு இந்தியா முழுவதும் இஸ்லாமிய பிரச்சாரம் செய்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை இஸ்லாத்தின்பால் அழைத்து வந்துள்ளார்.
ஒரு பள்ளிவாசலை இடித்ததற்கு பிராயச்சித்தமாக எண்ணற்ற பள்ளிவாசல்கள் உருவாக காரணமாக இருந்துள்ளார்.
இன்று 18.12.2015 நாகர்கோவில் பள்ளிவாசலில் ஜும்ஆ முடிந்த பிறகு அவரிடம் அங்கிருந்தவர்கள் கை குலுக்கினர்.
Alhamdhulillah! Allah is the greatest deviser.
ReplyDeleteஇஸ்லாமிய வரலாறு முழுவதும் ஆராய்ந்து பார்த்தால் மிகவும் கடுமையாக இஸ்லாத்துக்கு எதிராக உழைத்தவர்கள் பிற்காலத்தில் அதனையும் விட வேகமாக இஸ்லாத்துக்காக உழைத்துள்ளார்கள் .இஸ்லாத்தின் வளர்ச்சி என்பது அதற்கு வரும் எதிர்ப்பிலேதான் தங்கியுள்ளது .இவ்வாறான ஒரு சிறப்பான காலம் இலங்கையில் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது .
ReplyDelete"அவர்கள் அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர். எனினும் நிராகரிப்போர் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூரணமாக்கியே வைப்பான். (அல்-குர்ஆன் 61:8)
ReplyDelete"அவன் எத்தகையோன் என்றால், அவன் தன்னுடைய தூதரை நேர்வழியை கொண்டும், உண்மையான மார்க்கத்தை கொண்டும் அனுப்பி வைத்தான்; இணைவைத்துக்கொண்டிருப்போர் வெறுத்த போதிலும், மற்ற ஏனைய, எல்லா மார்க்கங்களைவிட, அதை மேலோங்கச்செய்யவே_(தன் தூதரை அனுப்பி வைத்தான்).
அதுதான் உண்மை!
ஏனெனில் இஸ்லாத்தின் எதிரிகள் முதலில் இஸ்லாத்தை (சாதாரணமாக எடைபோட்டு) ஊதி அணைக்க முனைந்திடுவர். ஆனால் முடியாமல் சலிப்படைந்து, சோர்வடைந்து... ஒரு பிரேக் போட்டு மறுபக்கம் மாறி வேகமாக வருவர்.