Header Ads



1980 களில் நைஜீரியாவில் ஊடுருவிய ஷியாக்கள், நாட்டை குழப்புகிறார்கள்..!

இராணுவ ஒடுக்கும்முறைக்கு எதி ராக வடக்கு நைஜீரியாவின் ஆறு நாகரங்களில் ஷியாக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இராணுவ நடவடிக்கைகளால் தமது நூற்றுக்கணக்கான சமூகத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக ஷியா முஸ்லிம்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த அர்ப்பாட்டங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட கடுனா நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரவ்ஹானி நைஜீரிய ஜனாதிபதி முஹமது புஹாரியை தொலைபேசியில் அழைத்து இந்த பதற்ற சூழல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எனினும் ஈரானிய ஆதரவு பிரிவினர் இராணுவத் தளபதி ஜெனரல் துகுர் புரதாயை கொல்ல சதி செய்வதாக நைஜீரிய இராணுவம் குற்றம்சாட்டுகிறது.

நைஜீரிய இஸ்லாமிய முன்னணி (ஐ.எம்.என்.) என்று அழைக்கப்படும் அந்த அமைப்பு இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது. சுன்னி முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட நைஜீரியாவில் கடந்த மூன்று தசாப்தங்களில் ஷியாகளில் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருகிறது. இதில் ஈரான் ஆதரவில் 1980களில் உருவாக்கப்பட்ட ஐ.எம்.என். அமைப்பு அந்நாட்டு பாதுகாப்பு படையினருடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு சொந்தமான பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகள் வடக்கு மாநிலங்களில் இயங்கி வருகின்றன. 


1 comment:

  1. Don't say Shi'a Muslim. Instead, call them brutal kaafir.

    ReplyDelete

Powered by Blogger.