Header Ads



15 வயதில் சவுதி சென்று, 19 வயதில் இறந்து, 7 மாதங்களின் பின் இலங்கைக்கு வந்த உடல்

அவிசாவளை புவக்பிட்டிய  பிரகதிபுர பகுதியில் வசித்த ஜீ.கிரிஷாந்தி 2012 ஆம் ஆண்டு பணிப்பெண்ணாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.

1997 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி பிறந்த இவர் சவுதி சென்றபோது, இவருக்கு வயது 15. மருதானையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாகவே கிரிஷாந்தி வெளிநாடு சென்றுள்ளார்.

இந்நிலையில், இந்த வருடம் மே மாதம் 6 ஆம் திகதி கிரிஷாந்தி உயிரிழந்ததாக தகவல் கிடைத்திருந்தும் அவரது உடலை இலங்கைக்குக் கொண்டு வர 7 மாதங்களாகியுள்ளன. தமது மகள் தற்கொலை செய்துகொண்டதாக மே மாதம் 6 ஆம் திகதி பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தொலைபேசியில் வீட்டிலுள்ளவர்களுடன் கிரிஷாந்தி உரையாடியுள்ளார்.

இதன்போது, மே மாதமே இலங்கைக்கு வருவதாக கிரிஷாந்தி பெற்றோரிடம் கூறியுள்ளார்.

கிரிஷாந்தியின் பெற்றோரின் கூற்றுக்கு அமைய, அவர் வெளிநாடு சென்ற சந்தர்ப்பத்தில் 16 வயதைப் பூர்த்தி செய்திருக்கவில்லை என்பது தெளிவாகப் புலப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் கொள்கைக்கு அமைய, 16 வயதுக்குக் குறைந்த அனைவரும் சிறார்களாகக் கருதப்படுவதுடன், சிறார்கள் வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்வது சட்ட விரோதமானதாகவும் கருதப்படுகின்றது.

சிறிது காலத்திற்கு முன்னர் சவுதியில் கொலை செய்யப்பட்ட ரிசானா தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் அதிகக் கவனம் செலுத்தப்பட்டது.

5 comments:

  1. First of all these Agents ( Pimps) Licence should be cancelled.

    ReplyDelete
  2. Before that,the parents must be takeen in to custody and punish .
    They are culprits. Give them severe punishment as well as agency.

    ReplyDelete
  3. வெளிநாடு போக நற்சான்று பத்திரம் அடையாள அட்டை எடுக்க லஞ்சம் வாங்கிக் கொண்டு உறுதிப்படுத்தும் G s களை முதலில் கைது செய்ய வேண்டும் அரசாங்கம் இந்த GS களை திருத்தினால் நாடு நல்லார் வரும்

    ReplyDelete
  4. போலி சான்றிதழ் மூலம் அந்த பிள்ளையை வெளிநாட்டுக்கு அனுப்பியவர்கள், அந்த பிள்ளையை கொலை செய்த குற்றவாளிகள் ஆவார்கள். அனைவருக்கும் கடும் தண்டனை கொடுத்தல் வேண்டும்.

    சவுதியில் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதை அறிய வேண்டாமா? அரபிகளை பற்றி எல்லோருக்கும் தெரியுமே...

    ReplyDelete
  5. South Africa having 500,000 rapes per year,China having 31,833 rapes a year,and the United Kingdom at 85,000 rapes a year.

    In Every 2 minutes, someone in the U.S. is sexually assaulted. ( ஆஹா எவ்வளவு மனித நேயம் நிறைந்தவர் இருக்கிறார்கள் )

    Ref: http://www.rccmsc.org/resources/get-the-facts.aspx

    India - 24 923 in 2012 out of this 24470 committed by someone known to the victim. Unreported cases are in thousands.( and the girls been kidnapped and sold in red light districts never comes out. Those are officially protected by politicians and big shots )

    But over all crime rates in Saudi Arabia


    "Crime in Saudi Arabia is relatively low when compared to some developed nations, but may be increasing due to higher levels of foreign workers and higher levels of unemployment among Saudi residents."

    — John Wilson, on the crime situation in Saudi Arabia, in the book International Security and the United States: An Encyclopedia[5]

    So according these stats we should say " மேற்கத்திய போலி மனித நேயத்தைப்பற்றித்தான் நன்றாக தெரியமே!!! இவர்களைக்காட்டிலும் அரேபியர்கள் எவ்வளவோ மேல்.

    ReplyDelete

Powered by Blogger.