134 குழந்தைகளை பலிவாங்கிய ராணுவப் பள்ளி துப்பாக்கிச்சூடு, 4 தலிபான்கள் இன்று தூக்கிலிடப்பட்டனர்
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராணுவப் பள்ளிக்குள் புகுந்து தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 134 குழந்தைகள் உள்பட 153 பேர் கொல்லப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் தடைசெய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை மீண்டும் நிறைவேற்ற பிரதமர் நவாஸ் செரிப் உத்தரவிட்டார். அந்த உத்தரவையடுத்து, தீவிரவாதிகள் உள்ளிட்ட கொடும் குற்றவாளிகள் பலரின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெஷாவர் ராணுவப் பள்ளியில் கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்திய நான்கு தீவிரவாதிகள் இன்று தூக்கிலிடப்பட்டனர். தூக்கிலிடப்பட்ட நால்வரும் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் கிளையான தொஹீத்வால் ஜிஹாத் குழு என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Good job. In the name of Islam they kill innocent and tarnished the reputation of Islam
ReplyDelete