ஈரானில் பாராளுமன்றத் தேர்தல் - 12,000 பேர் வேட்பு மனு தாக்கல்
ஈரானில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட, சாதனை அளவாக 12,000 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 2012-ஆம் ஆண்டுத் தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களின் எண்ணிக்கயைவிட இது 70 சதவீதம் அதிகம் என அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதுகுறித்து அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடுவதற்காக 12,000 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இது கடந்த தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களைவிட 70 சதவீதம் அதிகம்.
வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் 11 சதவீதத்தினர் பெண்கள். இது முந்தைய தேர்தலைவிட 8 சதவீதம் அதிகம்.
50-க்கும் குறைவான வயதுடைய வேட்பாளர்களின் விகிதம், முந்தையத் தேர்தலில் 67 சதவீதமாக இருந்து, தற்போது 73 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தள்ளுபடி செய்த மனுக்கள் போக, இறுதி வேட்பாளர்களின் பட்டியல் வரும் பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment