பிரதமர் பதவி குறித்த கனவில் மிதப்பவர்கள், UNP அரசாங்கத்தை பதவி கவிழ்க்க சதி - அமைச்சர் ஹரின்
ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான அரசாங்கத்தை பதவி கவிழ்க்கும் சதித்திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் தொலைத்தொடர்புகள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, பீ.பீ.சி. சந்தேசய சிங்கள செய்திச் சேவைக்கு அளித்துள்ள நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நல்ல விடயங்களின் பாராட்டை ஒரு தரப்பினர் பலவந்தமாக பெற்றுக் கொள்கின்றனர். பொதுமக்களின் ஏச்சுக்கள் மற்றும் அதிருப்தி என்பன மட்டும் ஐக்கிய தேசியக்கட்சியின் பக்கமாக திருப்பி விடப்படுகின்றது.
அண்மைக்காலமாக அரசாங்கத்தினுள் நடைபெற்று வரும் விடயங்களை வைத்துப் பார்க்கின்ற போது ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான அரசாங்கத்தை பதவி கவிழ்க்கும் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டு வருவது நன்கு புலனாகின்றது. எனினும் நாங்கள் தொடர்ந்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
இவ்வாறான சிக்கல்களுக்கு பிரதமர் பதவி குறித்த கனவில் மிதப்பவர்களே காரணம் என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Post a Comment