Header Ads



ஜனாதிபதி மைத்திரி தொடர்பில், அவதூறான செய்தி - விசாரணைஆரம்பம்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் அவதூறான செய்தியொன்றை வெளியிட்டமை தொடர்பாக திவயின பத்திரிகைக்கு எதிராக விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கடந்த 17ம் திகதி நடைபெற்றிருந்தது. இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த கூட்டத்துக்கு தலைமை வகித்திருந்தார்.

இக்கூட்டத்தில் ஜனாதிபதி தனது உரையின்போது எதிர்வரும் 2020ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தான் பிரதமர் பதவிக்குப் போட்டியிடவுள்ளதாக தெரிவித்திருந்ததாக திவயின பத்திரிகை செய்தியொன்றை வெளியிட்டிருந்தது. இச்செய்தி கடந்த 18ம் திகதி வெளிவந்திருந்தது.

எனினும் அதன் பின்னர் குறித்த செய்தி பிழையானது என்று திவயின பத்திரிகை மன்னிப்புக் கேட்டிருந்தது.

இதற்கிடையே இச் செய்தி எதற்காக பிரிசுரிக்கப்பட்டது? தவறுதலாகவா அல்லது வேண்டுமென்றே பிரசுரிக்கப்பட்டதா? என்பது குறித்த விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனினும் விசாரணை முடிவில் இது தொடர்பாக வழக்குத் தொடர்வதற்குப் பதிலாக பத்திரிகை முறைப்பாட்டுப் பேரவை ஊடாக குறித்த செய்தியாளருக்கு அறிவுரையொன்றை மட்டும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

No comments

Powered by Blogger.