புயலைத் தோற்றுவித்துள்ள ராஜித, பிரதமர் பதவியை அடைய முயற்சிப்பதாக அதிருப்தி
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவது தொடர்பாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்னவின் அண்மைக்கால கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் அரசாங்கத்தினுள் பெரும் புயலைத் தோற்றுவித்துள்ளது. அத்துடன் அரசாங்கத்தின் மீது பொதுமக்களை அதிருப்தியடையவும் செய்துள்ளது.
இதன் காரணமாக அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர ஆளுங்கட்சி அமைச்சர்கள் உள்ளிட்ட சிலர் இரகசிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த முயற்சிக்கு எதிர்க்கட்சியில் இருக்கும் மஹிந்த தரப்பு அணியின் ஆதரவும் கிடைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அமைச்சர் ராஜித சேனாரத்ன எதிர்காலத்தில் பிரதமர் பதவியை அடையும் நோக்கில் இவ்வாறு தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வதாக அரசாங்கத்தினுள் ஒரு அதிருப்தி அலை உருவாகியுள்ளதாகவும் குறித்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Post a Comment