"சுதந்திரக் கட்சிக்காரர்களால், ஒட்டுமொத்தமாக வெறுக்கப்படும் மைத்திரி" - முன்னாள் பிரதமரின் மகன்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வெறுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹொரணையில் நேற்று (14) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள விதுர விக்கிரமநாயக்க,
சுதந்திரக் கட்சிக்காரர்களால் ஒட்டுமொத்தமாக வெறுக்கப்படும் மைத்திரிபால சிறிசேனவினால் ஒருபோதும் கட்சிக்கு வெற்றியைத் தேடித்தரமுடியாது.
அவர் தலைமை தாங்கி கட்சியை வழிநடத்தினால் எதிர்வரும் தேர்தல்களில் கட்சியின் சார்பில் போட்டியிட வேட்பாளர்களைத் தேடுவதும் சிரமமான விடயமாகிவிடும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கியதன் காரணமாகவே சுதந்திரக் கட்சி 95 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றது.
மைத்திரி தலைமை தாங்கியிருந்தால் 35 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கூடப் பெற்றிருக்க முடியாது போயிருக்கும் என்றும் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
Post a Comment