Header Ads



நாட்டில் இன்று ஊடகங்கள் கிடையாது - சீறுகிறார் மகிந்த

நாட்டில் இன்று ஊடகங்கள் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

தங்கல்ல கோதம விஹாரையில் நடைபெற்ற மத நிகழ்வு ஒன்றில் பங்கேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வீரகெட்டியவில் நிர்மாணிக்கப்பட்ட சந்தை பிரிம்பாக காணப்படுகின்றது. எனினும் அங்கு வர்த்தகம் செய்ய முடியாதுள்ளது. இது பற்றிய விபரங்கள் ஊடகங்களில் அம்பலப்படுத்தப்படுவதில்லை.

வரவு செலவுத்திட்டத்திற்கு சுதந்திரக் கட்சியில் ஆதரவளிப்போரும் உள்ளார்கள், எதிர்ப்போரும் உள்ளார்கள். விரும்பியவாறு வாக்களிப்பர். வரவு செலவுத்திட்டத்தில் எவ்வாறு வாக்களிக்க வேண்டுமென நாம் யாருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை.

வரவு செலவுத்திட்டம் மக்களுக்கு சுமையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் மேலும் குறைவடையும்.

புகைப் பரிசோதனை சான்றிதழ் கட்டணத்தை குறைக்குமாறு முச்சக்கர மற்றும் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தியதனைத் தொடர்ந்து கட்டணம் குறைக்கப்பட்டது. எதிர்காலத்தில் மேலும் மேலும் குறைவடையும்.  உர மானியம் முற்று முழுதாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

இரண்டு போகங்களுக்கும் 25000 ரூபா வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனைக் கொண்டு எவ்வாறு உரம் வாங்குவது? அப்படியானால் ஒரு போகத்திற்கு 12500 ரூபாவே கிடைக்கும் இதனைக் கொண்ட உரம் வாங்க முடியாது.

நான் வீரக்கெட்டிய சந்தைக்கு சென்றேன் கறிமிளகாய் ஒரு கிலோ 400 ரூபா என்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. There's media in China ! Why not settle down there?

    ReplyDelete
  2. CSN கால்டன் ஸ்போர்ட்ஸ் நெற்வர்க்கை மகனின் பெயரில் உருவாக்கி
    அரச பொது உடைமைகளான ரூபாவாகினி மற்றும் ஐடிஎன் அலைவரிசைகளை சூறையாடி பாரிய பொருளாதார நெருக்கடிக்குள்ளாக்கிய உனக்கு ஏன் இன்னும் கொலைவெறி. பழைய கணக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளனவே .பைல்கள் புரட்டப்படும் போது நம் நாட்டில் ஊடகங்கள் உள்ளனவா அல்லது CHINAவிலிருந்து மீண்டும் பிச்சைகேட்டு வாடகைக்கு கொண்டுவரவேண்டுமா என்பதனை அறிந்து கொள்வாய்.

    ReplyDelete
  3. அடடா மக்களைப்பற்றி என்னமா கவலைப் படுகின்றார்? மழைக்கால ஓநாய்கள்.

    ReplyDelete

Powered by Blogger.