இளைஞர்களிடம் சமூக உணர்வுகள், அருகிவருவது கவலைக்குரியது - ஆரிப் சம்சுதீன்
(சுலைமான் றாபி)
அப்போதைய இளைஞர் சமுதாயத்துக்கு இருந்த சமூக உணர்வுகள் இப்போதைய இளைஞர்களிடம் அருகிவருவது கவலை அளிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரம், கிழக்குமாகாணசபை உறுப்பினருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் நேற்று (31) சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் இடம்பெற்ற லீடர் அஷ்ரப் ஞாபகார்த்த இளைஞர் மாநாட்டிற்கு தலைமை தாங்கி உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் நமது சமூகத்துக்கு ஆற்றிய அளப்பெரிய சேவைகள் மற்றும் அவர் காட்டிய வழிகள் முஸ்லிம்களுக்கு அரசியல் தலைமைத்துவத்தை பெற்றுத்தந்தமை போன்ற விடயங்கள் இப்போதைய இளைய சமூதாயத்துக்கு புரியவைக்கப்படவேண்டியுள்ளது.
அதேவேளை இவ்வேளையில் அவர்களை ஒன்றிணைத்து சமூக உணர்வுக்குள்ளும் எதிர்கால நம் சமூகத்தை வழிநடத்தக் கூடியவர்களாகவும் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டதே இந்த மாபெரும் இளைஞர் மாநாடு என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியத்தலைவரும் நகரங்கள் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கள் அமைச்சருமான றவூப் ஹக்கீம் கட்சியின் முக்கியஸ்தர்கள் துறை சார்ந்த வளவாளர்கள் உலமாக்கள் பெரும் திரளான இளைஞர் என பலரும் இணைந்துகொண்டிருந்த இம்மாநாட்டில் கல்வி, விளையாட்டு, கலை கலாச்சாரம், சமயம் கண்டுபிடிப்பு துறைகளில் பல்வேறு சாதனைகளை புரிந்த இளைஞர்கள் முதன் முறையாக (LAMA) தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளதுடன் நிகழ்வில் பங்குகொண்ட இளைஞர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
Muslimgal allathorodu adithadigalukku mattumthaan samooga unarvai payan
ReplyDeletepaduththugirargal .