அமைதியாக இருப்போம் - மகிந்த
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் குறித்து தமக்கு சுதந்திரகட் கட்சி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக குருநாகல் மாவட்ட சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர் சத்தார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
மகிந்த ராஜபக்ஸ இல்லாமல் சுதந்திரக் கட்சியினால் வெற்றி பெறமுடியாது. இதனை கட்சியின் ஆதரவாளர்கள் நன்கு அறிந்துள்ளனர். தற்போதைய அரசாங்கத்திற்குள் தினமும் குழப்பங்கள் அதிகரித்துவருகிறது. ரணிலை அகற்றிவிட்டு சஜித்தை பிரதமராக்கவும் முயற்சிக்கப்படுகிறது. சிலவேளை தேர்தல்கள் ஒத்திவைக்கப்படும் சூழ்நிலையும் காணப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரி தரப்பும், ரணில் விக்கிரமசிங்கவும் நாட்டை வங்குரோத்து நிலைமக்கு கொண்டுவந்துள்ளனர். அவர்களுக்குள் மோதல் ஏற்படும் நிலை தோன்றியுள்ளது. தற்போதைய நிலைமைகளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நன்கு அவதானித்து வருகிறார்.
அமைதியாக இருப்போம் என்பதுதான் மகிந்த ராஜபக்ஸவின் நிலைப்பாடு. எனினும் அவருக்கு செல்வாக்கு குறையவில்லை. இதனால் அஞ்சிப்போயுள்ள மைத்திரி விசுவாசிகள் தாம் உட்பட பலருக்கும் மகிந்தவின் பிறந்தந நாள், கூட்டங்கள், கலந்துரையாடல்கள் போன்றவற்றில் பங்கேற்க வேண்டாமென கட்டுப்பாடுகளை விதித்து வருவதாகவும் சத்தார் குற்றம் சுமத்தினார்.
Post a Comment