Header Ads



ஜப்பானில் புரட்சியை ஏற்படுத்திய சாகிர் நாயக், இஸ்லாத்தை நோக்கி மக்கள்...!

தொழில்நுட்பத்தில் முன்னோடியாய் திகழும் ஜப்பான் பௌத்த மதத்தினரை கொண்ட நாடாகும். ஜப்பானில் சில ஆண்டுகளாக இஸ்லாமிய தாக்கங்கள் ஏற்பட்டு ஜப்பானிய மக்கள் இஸ்லாத்தை மிக தீவிரமாக ஆய்வு செய்து இஸ்லாம் இறைவனின் மார்க்கம் என்பதை உணர்ந்து இஸ்லாத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுவருகின்றனர்.

இந்நிலையில் பிரபல இஸ்லாமிய அறிஞரான ஜாகிர் நாய்க் அவர்கள் இம்மாதம் ஒரு வார பயணமாக ஜப்பான் சென்றார்.

ஹிரோஷிமா, நாகசாயி, டோக்யோ பல்கலை கழகம் என்று முக்கிய வரலாற்று இடங்களில் 6 நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில் இஸ்லாம் என்றால் என்ன ? முஹம்மது அவர்கள் இறைத்தூதர் என்பதற்கான சான்றுகள், மனிதகுல பிரச்சினைக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன ? என்பது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தினார்.

ஜப்பானிய மக்கள் இஸ்லாம் குறித்து கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் மிக தெளிவான முறையிலும், சிந்திக்க கூடிய வகையிலும் ஜாகிர் நாய்க் பதில் அளித்தார்.

இந்த நிகழ்ச்சிகளின் மூலம் ஏராளமானவர்கள் இஸ்லாத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர்.

8 ஆம் தேதி டோக்யோ பல்கலைகழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மட்டும் 6 மாணவர்கள் இஸ்லாத்தை தழுவினர்.

அதுமட்டுமில்லாமல் ஜப்பானிய மக்கள் இஸ்லாத்தை ஆய்வு செய்வதற்காக ஜப்பானிய மொழியில் இலவச திருக்குர்ஆன் ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்து பெற்றுக்கொள்வதற்கு வழிவகைகளை செய்து கொடுத்தும் உள்ளார்.

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே...

No comments

Powered by Blogger.