தனது அதிகாரங்களை குறைக்கும், அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கிறார் மைத்திரி
தற்போது அமுலில் உள்ள நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கி , அதன் அதிகாரங்களை பாராளுமன்றத்திடம் பகிர்ந்தளிக்கும் வகையிலான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை நாளை (18) சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய தேர்தல் முறை தொடர்பிலும் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அலரி மாளிகையில் இன்று நடைபெறும் நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த முறைமை புதிய அரசியலமைப்பில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களில், ஜனாதிபதி மைத்திரியால் அதிகமாக பேசப்பட்ட விடயமாக, நிறைவேற்று அதிகாரத்தினை குறைக்கும் திட்டங்கள் முன்மொழியப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment