Header Ads



தள + தளபதி தருதலைகளால் நாசமாய்போகும், இஸ்லாமிய இளைஞர்களுக்கு..!


-Mohamed Shajahan-

Assalamu alikkum warahmathullahi wabrakathuh 

இன்றைக்கு இஸ்லாமிய இளைய சமூகம் இந்த கூத்தாடிகளைத் தான் தலை என்றும் தளபதி என்றும் தருதலைகளை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டும் அவர்களின் அசிங்கமான விபச்சார வாழ்க்கை முறைகளை பின்பற்றி கொண்டும் இருக்கின்றார்கள்!!!

அவர்களை போன்று தாடியை சிறைத்து பெண்ணின் முகத்தைப் போல பல பல என்று காட்டுவதும்

அவர்களை போன்று தலை முடியை வெட்டுவதும்.

மொத்தத்தில் அவர்கள் இறைவனுக்கு இணைவைக்கும் தருதலைகளை தலைவனாக ஏற்று அவர்களின் கேடுகெட்ட விபச்சார வாழ்க்கையையும் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள்.

நவுதுபில்லாஹ்........

நாம் யாரை தலைவனாக ஏற்க வேண்டும்???

யாருடைய வாழ்க்கை முறையை நாம் பின்பற்ற வேண்டும்???

என்பதை யோசித்து இருந்தால் இப்படி செய்வார்களா???

இவர்கள் படங்களில் சொல்வதை போல நிஜ வாழ்க்கையில் செய்து காட்டுபவர்ளா? பக்கம் பக்கமாக வசனத்தை பேசுகிறார்கள் ஆனால், அது அவர்களின் நிஜ வாழ்வில் இருக்கிறதா என்பதை யோசித்து பார்க்கிறோமா?
ஆனால்...

தான் சொன்னதையே தன் உயிர் மூச்சாக வாழ்ந்து காட்டியவர் உத்தம நபி முஹம்மத் (ஸல்) அவர்கள்.

அந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களை அல்லவா அல்லாஹ் ''அழகிய முன்மாதிரி" என நமக்கு சொல்கிறான்.

இளைய சமுதாயமே.!!!!!!!

இன்று, நீங்கள் இப்படிப்பட்ட முன் மாதிரியை விட்டுவிட்டு யார் யாரையோ முன்மாதிரிகளாக ஆக்கிக் கொண்டுள்ளீர்களே.

நாளை மறுமையில் உங்களுக்காக இந்த கெடு கெட்ட "தல" "தளபதி " போன்ற தருதலைகள் அல்லாஹ்விடம் பரிந்துரை செய்து சொர்க்கத்திற்கு அழைுத்து செல்வார்களா?

அல்லாஹ் பாதுகாப்பானாக..

இதை எல்லாம் நீங்கள் யோசிக்காமல் இவர்களுக்காக வைக்கும் பேனர்களையும்,

கட்-அவுட்களையும் அதில் எழுதி உள்ள வார்தைகளையும் பார்த்தால் மனம் நொந்து வேதனை அடைகின்றது

யாருக்காக நீங்கள் பேனர் வைக்கிறீர்கள்??

மக்களை நேர்வழி படுத்த வந்த உத்தமர்கலுக்காகவா??

மார்கத்தை எதிரிகளிடம் இருந்து காக்க தியாகம் செய்தவர்கலுக்காகவா??

பணத்தை வாங்கிக் கொண்டு மலத்தை திங்கச் சொன்னாலும் தயங்காமல் அதை தின்பவர்களுக்காக...!!!

இதில் இந்த கூத்தாடிகளின் படத்தை பார்ப்பதற்கு ஆர்வத்தோடு எப்போது டா படம் ரிலீசாகும் என காத்து கிடந்து பார்க்கிறார்கள்.

என்றைக்காவது இவர்கள் தொழுக்கைகாக காத்து கிடந்தது உண்டா??

குர்-ஆனை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டது உண்டா?

எங்க "தளபதி" இப்டி
எங்க "தல" அப்டி.
என
கூத்தாடி தருதலைகளின் வாழ்க்கையை துருவி ஆராய்ந்து அதை பறை சாற்றும் நீங்கள்
உங்களின் நபியின் வாழ்க்கையை ஆராய்ந்தது உண்டா??

அவரின் வாழ்க்கை வரலாற்றை படித்ததுண்டா?

நபியை பற்றி பிற மக்களிடம் எடுத்து சொல்ல முனைந்ததுண்டா??

அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

என் அன்பு சகோதரர்களே…

நாளை அல்லாஹ்-விடம் செல்ல இருக்கிறோம், சொர்க்கம் நரகம் என்று இருக்கிறது அதற்கு முன்பு கேள்வி கணக்கு இருக்கிறது என்பதை சற்று சிந்தித்துக் கொள்ளுங்கள்.

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. - அல்குர்ஆன்(33:21)

6 comments:

  1. அருமையான கருத்து இந்த நாசமா போன சினிமாவால் இஸ்லாத்தை விட்டு வெகு தூரமாக உள்ள முஸ்லிம்களுக்கு இது ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும்.வாளிபர்கைபோல் வயதுவந்தவர்களும் இந்த கேடுகெட்ட சினிமாவிலும் கிரிக்கட்டிலும் மூழ்கி ஜும்மாவுக்கு கூட போகாமல் கால நேரத்தை கழிக்கும் அநியாய காட்சியை கண்டு கண்கலங்க வேண்டியுள்ளது கேட்டால் இன்னும் இகாமத் சொல்லவில்லை என்று ஐம்பது வயது நிரம்பியவர்கள் சொல்லும் கதையை என்னவன்று சொல்லுவது இவ்வாறு நம் சச்முதாயம் நடந்தால் அல்லாஹ்வின் உதவி எவ்வாறு வரும்.இப்படிப்பட்டவர்கள் ஒரு நாளையிலாவது உலக முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக துஆ செய்திருப்பார்களா?

    ReplyDelete
  2. Bro Shajahan இன் கருத்து உண்மைதான். ஆனால் அவர் அந்த இருவரையும் "தருதலை" என்று கூறுவது unislamic என நான் நினைக்கிறேன். அவர்களின் மார்க்கம் அவர்கள் செய்வதை ஒரு பிழையாக கருதவில்லை.
    ஆனால் இஸ்லாம் அடுத்தவர்களை இழிவு படுத்துவதையோ , தகாத வார்த்தைகளை உபயோகிப்பதையோ தடுத்துள்ளது.
    So நம்மவர்களை திருத்தவேண்டும் என்பதற்காக அடுத்தவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி நீங்கள் பிழை செய்யவேண்டாம்!!

    ReplyDelete
  3. இந்த கூத்தாடிகளுக்காக தம் பெற்றோர்களையும் உடன்பிறப்புகளையும் தவறாக பேசும் இவர்களை கண்டு என்ன செய்வது.

    ReplyDelete
  4. திரைப்படம் என்பது ஒரு காட்சி ஊடகம் சார்ந்த பொழுதுபோக்கு. அவ்வளவுதான்.

    அதில் பங்குபற்றும் எந்த நடிகரும் இஸ்லாமிய இளைஞர்களிடம் எங்களுக்குப் பின்னால் இழுபடுங்கள் என்று கூறவில்லையே..!

    இஸ்லாமிய மதத்தை சமூகத்தில் நடைமுறைப்படுத்தும் உலமாக்களும் மத அறிஞர்களும் உலக வாழ்க்கையின் நன்மை தீமைகளை சரிவர வலியுறுத்தி வந்திருப்பார்களாயின் அதன் மீது உண்மையான நம்பிக்கையும் பற்றும் இருப்பவர்கள் ஒருபோதும் இப்படியான வழியில் இழுபட்டுத் திரிய மாட்டார்கள்.

    ReplyDelete
  5. இதற்கு முதல் காரணம் தாய் தந்தையாரின் வளர்ப்பு தான்

    ReplyDelete
  6. இதற்கு முதல் காரணம் தாய் தந்தை தான் இறை அச்சத்தோடு வளர்த்தால் இப்படி பொக மாட்டார்கள்

    ReplyDelete

Powered by Blogger.